வட மாநில வாலிபர்கள் கடத்தப்பட்ட வழக்கு – 2 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

வடமாநில வாலிபரை ஆட்டோ ஓட்டுநர்கள் கடத்திச் சென்ற விவகாரத்தில் இரண்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை ரயில் நிலையத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேர் கடத்திச் சென்று பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கடம், அன்னூர், செல்வபுரத்தைச் சேர்ந்த முகமது அசாருதின், நௌபல் பாஷா, செந்தில்குமார் ஆகியோர், உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளைஞர்களை பயணிக்குமிடமாகக் கூறி ஏற்றி, ஆவாரம்பாளையம் மேம்பாலத்துக்கு அழைத்து சென்று, மிரட்டி GPay மூலம் ரூ.13,000 பறித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களது ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சமூகவலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து மேலும் புகார்கள் வந்ததால், செந்தில்குமார் மற்றும் நௌபல் பாஷா மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story