குத்து விளக்கை திருடிய 2 வாலிபர்கள் கைது

குத்து விளக்கை திருடிய 2 வாலிபர்கள் கைது
X
திண்டுக்கல்லில் கோயில் பித்தளை குத்து விளக்கை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு
திண்டுக்கல், மருதாணிகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மருதாணி மகாகாளியம்மன் திருக்கோவிலில் உள்ள 3 1/2 அடி உயரமுள்ள 15 கிலோ எடையுள்ள பித்தளை குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கோவில் பூசாரி செண்பகபாண்டியன் நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மருதாணி குளம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் செல்வகணபதி(31), சமயன் மகன் வீரமணிகண்டன்(32) ஆகிய 2 பேரை கைது செய்து பித்தளை குத்து விளக்கை மீட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story