கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது !

கோவில் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது.
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தியனர். இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நேரு மற்றும் கோவையின் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
Next Story