பேரூர் கோவிலில் ஆகம விதி மீறல்: அர்ச்சகர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

பேரூர் கோவிலின் எலக்ட்ரீசியன் வேல்முருகன் மற்றும் அர்ச்சகர் சாமிநாதன் ஆகியோர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆகம விதிகளை மீறி இரவு நேரத்தில் நடை திறக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. ஒரு பிரமுகருக்காக நடை மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.vஇதனையடுத்து, விசாரணை நடத்திய மருதமலை கோவில் தக்கார் செந்தில்குமாரின் உத்தரவுப்படி, கோவிலின் எலக்ட்ரீசியன் வேல்முருகன் மற்றும் அர்ச்சகர் சாமிநாதன் ஆகியோர் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
Next Story