ஆட்டு சந்தை களைகட்டியது - ரூ.2 கோடிக்கு விற்பனை

ஆட்டு சந்தை களைகட்டியது - ரூ.2 கோடிக்கு விற்பனை
X
அய்யலூர் ஆட்டு சந்தை களைகட்டியது - ரூ.2 கோடிக்கு விற்பனை
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற ஆட்டு சந்தையாக அய்யலூர் ஆட்டு சந்தை உள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறும். இதனால் அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ஏராளமான வியாபாரிகள் கூடியதால் சந்தை களைகட்டியது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகள் மற்றும் கோழிகளை வாங்கி சென்றனர். சண்டை சேவல்களை மோத விட்டு பார்த்து இளைஞர்கள் வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடைபெற்றது. குறிப்பாக இளைஞர்கள் சண்டை சேவலை அதிக அளவில் வாங்கி சென்றனர்.
Next Story