ஓச்சேரி அருகே குட்கா கடத்திய 2 பேர் கைது!

X
காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அருள்மொழி மற்றும் போலீசார் ஓச்சேரி, சித்தஞ்சி, கரிவேடு, மாமண்டூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு லாரி ஓச்சேரியை அடுத்த சித்தஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே நின்றது. அந்த லாரியில் இருந்து ஒரு சரக்கு மூட்டையை 2 பேர் இறக்கினர். இதைப் பார்த்த ரோந்துப் போலீசார் விரைந்து வந்து லாரி டிரைவரிடம் விசாரித்தனர். அவர், லாரியில் இருந்து இறக்கிய மூட்டையில் தமிழக அரசு தடை செய்த ஹான்ஸ் மற்றும் கூலிப், குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததாகக் கூறினார். இதையடுத்து டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் வேல்முருகன் (வயது 26) மற்றும் விஜய் (26) என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 45 பாக்கெட் ஹான்ஸ், 8 பாக்கெட் கூலிப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேர் மீதும் வழக் குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

