டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது.

டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது.
X
வனத்துறையினர் நடவடிக்கை
சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில் வனவர்கள் வீரக்குமார், வெங்கடேஷ், சுரேஷ் மற்றும் வனத்துறையினர் தாரலகுட்டை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் துப்பாக்கி சத்தம் கேட்ட பகுதியை நோக்கி சென்றனர். அப்போது 2 பேர் நாட்டுத்துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் தாரமங்கலத்தை சேர்ந்த கமல் (வயது 50), மேச்சேரியை சேர்ந்த செல்வம் (36) என்பதும், அவர்கள் வனப்பகுதியில் வவ்வால்களை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் மற்றும் நாட்டுத்துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story