திமிரி: மாடுகள் திருடிய வழக்கில் 2 பேர் கைது

X
திமிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட் பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருட்டு நடைபெற்று வந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று தாமரைப்பாக்கம் போலீஸ் சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கோபிநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருவரை மடக்கி விசா ரணை நடத்தியதில் அவர்கள் ஆரணி பாளையம் வீர சுவாமி தெருவை சேர்ந்த ராஜி (வயது 43), சத்யா நகர் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (65) என்பதும், இவர்கள் இருவரும் திமிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மாடு திருட்டில் ஈடு பட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவர் மீதும் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.
Next Story

