பிளஸ் 2 மாணவன் மாயம் - புகார்

X
குமரி மாவட்டம் இரணியல் அருகே தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் மகன் விக்னேஷ் (17). இவர் பிளஸ் 2 தேர்வு முடித்துவிட்டு மேல் படிப்புக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வீட்டில் தூங்கிய விக்னேஷ் திடீரென மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் விக்னேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் செந்தில்குமார் நேற்று புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் எங்கே சென்றார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

