ஜெயங்கொண்டம் அருகே கோயில் உண்டியலை உடைத்து சில்லறையை வீசிவிட்டு 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்த விசித்திர கொள்ளையர்கள் நள்ளிரவில் துணிகரம்மர்ம கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

X
அரியலூர், ஆக.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோவிலில் பூசாரிக்காக பணியாற்றும் சுந்தரம் நேற்று இரவு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார் மீண்டும் இன்று காலை கோயிலை திறந்து பார்த்தபோது கருவறைக்கு முன்பாக இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கோவில் பூசாரி சுந்தரம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில் மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் வந்து கருவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 2 லட்சம் ரொக்கம் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சில்லறையை கோயில் வளாகத்தின் ஓரத்தில் வீசி சென்றது தெரியவந்தது கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது பற்றி கோயில் பூசாரி சுந்தரம் கூறும்போது :- கடந்த. இரண்டு ஆண்டுகளாக கோயில் உண்டியல் பணம் எடுக்காத நிலையில் 2.5 லட்சத்துக்கு மேல் பணம் இருந்ததாகவும், தற்பொழுது சில்லறைகளை மட்டும் விட்டு விட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் கூறினார். முன்னாள் தலைவர் ரங்கநாதன் கூறும்போது :-நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உண்டியலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் தொகை இருந்ததாகவும், ரூபாய் நோட்டுக்களை மட்டும் மர்ம நபர்கள் கோயிலில் சாவகாசமாக உட்கார்ந்து பொறுக்கிக் கொண்டு 10 முதல் இரண்டு ரூபாய் சில்லறைகளை சுமார் 15,000 க்கு மேல் உள்ள சில்லறைகளை தூக்க முடியாத காரணத்தால் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உண்டியல் பணம் பிடிக்காததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இது போன்ற கைவரிசையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story

