காவேரிப்பட்டணம் அருகே டிராக்டா் மீது லாரி மோதி 2 பேர் பலி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜெகதாப், வால்பாறை பகுதியைச் சோ்ந்த பட்டாபியின் மகன் கார்த்திக் (30) முத்துசாமியின் மகன் கார்த்திக் ( 32) ஆகிய இருவரும் பையூரில் உள்ள தனியார் மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். இந்த நிறுவனத்தில் இருந்து மாங்கொட்டைகளை சப்பாணிப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு டிராக்டரில் இருவரும் நிறுவனத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தோராத்தான் கொட்டாய் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக சென்ற லாரி டிராக்டா் மீது மோதியது இதில் படுகாயமடைந்த இருவரும் சம்வ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவேரிப்பட்டணம் போலீசார் உடல்களை மீட்டு இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
Next Story

