சின்ன ஓங்காளியம்மனுக்கு 2 லட்சம் வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரம்

சின்ன ஓங்காளியம்மனுக்கு 2 லட்சம் வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரம்
X
சின்ன ஓங்காளியம்மனுக்கு 2 லட்சம் வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும்அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும்அம்பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நாலாம் வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீகர்ப்ப ரட்சகாம்பிகையாகஓங்காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் மற்றும் மூலவருக்கு நான்காம் வெள்ளியை ஒட்டி சுமார் இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த ஓங்காளி அம்மனை பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டது. மூலவரை தரிசிக்கும் பக்தர்களுக்கு தாலி கயிறு,மஞ்சள் குங்குமம் மற்றும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவமூர்த்ததை தரிசனம் செய்ய வந்த கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தியும், ஐந்து வகையான சித்ரான்னங்கள் வழங்கியும் மற்றும் குங்குமம் வளையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அம்மனை வழிபட நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story