ஊபர் செயலியில் மெட்ரோ பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்: 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் டிசம்பரில் இயக்கம்

X
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊபர் (UBER) செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் தொடங்கிவைத்தார். சென்னை மெட்ரோ, ஒஎன்டிசி மற்றும் ஊபர் நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. இதில் சென்னையில் உள்ள ஊபர் பயனாளர்கள், க்யூஆர் அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறுவதோடு மெட்ரோ பயண தகவல்களையும் ஊபர் செயலியில் தெரிந்து கொள்ளலாம். அறிமுகச் சலுகையாக இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊபர் செயலியைப் பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் 50 சதவீதம் தள்ளுபடி பெறலாம். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து வேறு இடத்துக்கோ வேறு இடத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரையிலோ பயணிக்க ஊபர் செயலியில் கார், ஆட்டோ, பைக் புக் செய்தால் அதிலும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Next Story

