செவ்வாய்பேட்டையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

X
சேலம் செவ்வாய்பேட்டை நெய்மண்டி அருணாசலம் தெரு வித்யாமந்திர் பள்ளி அருகில் சிலர் ஆட்டோவில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ரெட்டிப்பட்டியை சேர்ந்த காஜாமைதீன், முள்ளுவாடி கேட் சாகர் மக்கான் தெருவை சேர்ந்த அப்பாஸ் (49) என்பதும், இவர்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 106 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story

