காப்பகத்தில் மாயமான 2 பள்ளி மாணவிகள் மீட்பு

X
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கிறிஸ்தவ நிறுவனம் நடத்தும் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை பராமரிக்கும் காப்பகம் ஒன்று உள்ளது. இந்த காப்பகத்தில் 27 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த காப்பகத்தில் இருந்து 17, 14 வயதுடைய இரண்டு மாணவிகள் தக்கலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காப்பகத்தில் இருந்து மாணவிகள் மாயமாகி இருந்தனர். காப்பக நிர்வாகிகள் பல இடங்களில் தேடியும் மாணவிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து காப்பகத் தலைவி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் இரண்டு மாணவிகள் சுற்றி திரிவதை கண்ட பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று விசாரித்த போது இரண்டு மாணவிகளும் மார்த்தாண்டம் காப்பகத்தில் இருந்து மாயமான பள்ளி மாணவிகள் என்பது தெரிய வந்தது. போலீசார் மாணவிகளை காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
Next Story

