இடக்கழிநாடு பேரூர் திமுக சட்டத்துறை மற்றும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டம்

இடக்கழிநாடு பேரூர் திமுக சட்டத்துறை மற்றும் பி.எல்.ஏ.2  பயிற்சி பாசறை கூட்டம்
X
இடக்கழிநாடு பேரூர் திமுக சட்டத்துறை மற்றும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
இடக்கழிநாடு பேரூர் திமுக சட்டத்துறை மற்றும் பி.எல்.ஏ.2 பயிற்சி பாசறை கூட்டம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், இடக்கழிநாடு பேரூர் திமுக சார்பில் திமுக சட்டத்துறை மற்றும் BLA 2 மற்றும் பாக முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் பேரூர் கழக செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சி தெற்கு மாவட்ட சட்டத்துறை அமைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த பயிற்சி கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது குறித்தும், வடமாநில தொழிலாளர்கள் பெயர்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டுள்ளதா திமுக கட்சியினரின் நிர்வாகிகள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், மேலும் இறந்தவர்களின் பெயர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பாசறைக் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் இனியரசு, பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்தா, துணைச் செயலாளர் ரஞ்சித் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story