ஒசூா் அருகே நண்பரை கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை.

ஒசூா்  அருகே நண்பரை கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை.
X
ஒசூா் அருகே நண்பரை கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை.
கிருஷ்ணகுரி மாவட்டம், ஒசூா் தின்னூரை சோ்ந்தவா் சந்தோஷ் (23) இவரது நண்பா் சுல்தான் (22). இவா்கள் இருவரும் பெயிண்ட்டர்கள். சந்தோசுடன் வேலை செய்து வந்த ராம்நகரைச் சோ்ந்த வினோத் (19) அடிக்கடி அவரின் தங்கையை தவறாக பேசிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நண்பா் சுல்தானுடன் சோ்ந்து 21.1.2022-அன்று பின்னூா் ஜீவா நகா் அருகே வினோத்தை வெட்டிக் கொலை செய்தனா். இது தெடர்பாக ஒசூா் நகர போலீசார் கைது செய்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி நேற்று கொலை செய்த சந்தோஷ் மற்றும் சுல்தான் 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தார்
Next Story