நடுக்கடலில் மீனவர்கள் மோதல் 2 பேர் படுகாயம்

X
குமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் இன்று சனிக்கிழமை காலையில் வழக்கம்போல் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றனர். சுமார் 3 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் வலையைப் போல் போட்டு மீன் கொடுத்துக் கொண்டிருந்தபோது, முட்டம் பகுதியை சேர்ந்த வள்ளம் மீனவர்கள் கடியப்பட்டினம் மீனவர்களிடம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தகராறு செய்தனர். இதில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஆரோக்கிய மகேஷ் (41), ஆண்டனி தினேஷ் (38) படுகாயம் அடைந்தனர். அவர்களை ஏற்று குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். குளச்சல் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

