மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது
X
காங்கேயம் சுற்று வட்டார பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
காங்கேயம் பஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 36) என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் மதுவிற்ற கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் (34) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறி முதல் செய்யப்பட்டன.
Next Story