மீன்சுருட்டி-கல்லாத்தூர் கிராமசாலை அமைக்க அரசாணை வெளியிட்டு 2மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து கிராமமக்கள் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைதுறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மீன்சுருட்டி-கல்லாத்தூர் கிராமசாலை அமைக்க அரசாணை வெளியிட்டு 2மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து கிராமமக்கள் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைதுறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
X
மீன்சுருட்டி - கல்லாத்தூர் கிராம சாலை அமைக்க அரசாணை வெளியிட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர், ஆக.20- ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி - கல்லாத்தூர் கிராம சாலை அமைக்க அரசாணை வெளியிட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி முதல் கல்லாத்தூர் வரையிலான சாலையை அப்பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி, குண்டவெளி, சலுப்பை, சத்திரம் அழகர்கோயில், வெத்தியார்வெட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்காகவும் அன்றாட தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதே சாலையில் பாதுகாக்கப்பட்ட உலகப் பிரதான சின்னமாக அறிவிக்கப்பட்ட யானை சுதை சலுப்பை சத்திரத்தில் அழகர் கோயில் முன்பு உள்ளது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சாலை சரியில்லாத காரணத்தினால் பலரும் திரும்பி செல்லும் சூழல் அதாவது இந்த சாலை தற்போது போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக இருப்பதால் இச்சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி, குண்டவெளி, சலுப்பை, சத்திரம் வெத்தியார்வெட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம், சாலையை சீரமைக்க வேண்டி காத்திருப்பு போராட்டம், கருப்புச்சட்டை அணிந்து போராட்டம், நாற்று நடும் போராட்டம், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், 10 க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம், விழிப்புணர்வுக்காக பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சாலையின் பள்ளத்தில் இருந்த சேற்றை வாரி உடலில் ஊற்றி குளிக்கும் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அண்மையில் ஜெயங்கொண்டம் மாநகருக்கு கடந்த 15.11.24 அன்று சிப்காட் தொழிற்சாலையை தொடங்கி வைக்க வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முயற்சித்து முடியாததால் அவரது நேர்முக உதவியாளரிடம் மீன்சுருட்டி டு கல்லாத்தூர் சாலை சீரமைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான கிராம மக்கள் மூலம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீன்சுருட்டி முதல் கல்லாத்தூர் வரையிலான சாலை கிராம சாலையாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அதனை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராத நிலையில் சாலையை செப்பனிடாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என எச்சரித்து கலைந்து சென்றனர். இதனையடுத்து அருகில் ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மீன்சுருட்டி -கல்லாத்தூர் சாலையை விரைந்து செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டி மீன்சுருட்டி டு கல்லாத்தூர் சாலை சீரமைப்பு குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மனு அளித்தனர்.
Next Story