வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

X
ஹிந்து சமய அறநிலைத் துறை சார்பில், 4 கிராம் தங்கம், சீர்வரிசை பொருட்களுடன் ஏழை எளிய மக்களுக்கு இலசவ திருமணம் நடத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், இரண்டு ஜோடிகளுக்கு, இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், 4 கிராம் தங்க தாலி மற்றும் 70,000 ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 26 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில்,கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில் தேவராஜ், அறநிலையத் துறை வாலாஜாபாத் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மணமகன், மணமகள் வீட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story

