கல்லூரி முன்பு நிறுத்திய 2 டூவீலர்கள் திருட்டு பிடிபட்ட குற்றவாளிகள்

கல்லூரி முன்பு நிறுத்திய 2 டூவீலர்கள்  திருட்டு பிடிபட்ட குற்றவாளிகள்
X
குமாரபாளையம் அருகே கல்லூரி முன்பு மற்றும் நிறுத்திய 2 டூவீலர்கள் திருடப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யபட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம் அருகே உப்புபாளையம் பகுதியில் வசிப்பவர் கவுதம், 19. குமாரபாளையம் வட்டமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஆக. 18ல், தனது தந்தையின் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லேண்டர் டூவீலரை, கல்லூரிக்கு வெளியில் காலையில் நிறத்தி விட்டு, மாலை 04:30 மணிக்கு வந்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வசம் புகார் கொடுத்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் தேடி வந்தனர். இது பற்றி விசாரணை செய்த போலீசார், திருப்பூர் மாவட்டம், பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்த வேணுகோபால், 58, என்பவர் டூவீலரை திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்தனர். இதே கல்லூரி முன்பு ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த துளசிமணி, 64, என்பவர், தனது டி.வி.எஸ். ஹெவி டூட்டி டூவீலரை நிறுத்தி விட்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள பல் மருத்துவமனைக்கு சென்று விட்டு, திரும்ப வந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இதனையும் வேணுகோபால் என்பவர் திருடியது தெரியவந்தது. இவரது வாகனமும் பறிமுதல் செய்து குமாரபாளையம் போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர்
Next Story