பைக், சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி

பைக், சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி
X
வடமதுரை அருகே பைக், சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பலி
திண்டுக்கல் வடமதுரை, EB- ஜங்ஷன் அருகே தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் முன்னாள் சென்ற பைக் மீது மோதி தொடர்ந்து சைக்கிள் மீதும் மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த பிலாத்து பகுதியை சேர்ந்த கனகராஜ்(64), சைக்கிளில் வந்த பழனிச்சாமி(55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் வடமதுரை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கார் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story