புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
X
பொத்தனூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்' ரூ.50 ஆயிரம் அபராதம்.
பரமத்திவேலூர், செப்.1- பரமத்திவேலூர் மற்றும் பொத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பொத்தனூர், வெங்கமேடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டீக்கடை, மளிகைக்கடைகளில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப் பட்ட ஹான்ஸ், பான்பராக், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர். இதனைத்தொடர்ந்து பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி புகையிலைப் பொருட்களை விற்ற டீக்கடை, மளிகைக்க டைக்கு‘சீல்’வைத்தார்.மேலும் தலா ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்தார்.தமிழகஅரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story