சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம்

சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம்
X
பள்ளி மாணவர்கள் 2வது நாளாக போராட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே,வி ஆலங்குளம் கிராமத்தில் தங்கள் பிள்ளைகள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கியவாறு பயணம் செய்வதால், அந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க கோரி, பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் 2வது நாளாக அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று போலீசார் பள்ளி மாணவர்களுடன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அத்துடன் போக்குவரத்து துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வழியாக கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரியிடம் பேச்சுவார்த்தை ஈடுபடுகிறோம் என தெரிவித்தனர்.
Next Story