ஓசூரில் இரும்பு தகடு விழுந்து 2 பேர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பேலகொண்டப்பள்ளி யில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இன்று பணியற்றிக்கொண்டிருந்த காளிமுத்து மற்றும் பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீது சுமார் 500 கிலோ எடை கொண்ட இரும்புத் தகடு எதிர்பாராதவிதமாகத் தவறி அவர்கள் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கிய 2 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மத்திகிரி போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

