சேலத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

சேலத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
X
போலீசார் விசாரணை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே வேடு காத்தாம்பட்டி பகுதி கருப்பனூரை சேர்ந்தவர் ராமலிங்கம் ( 55), வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் சித்தர் கோவில் ரோட்டில் சென்றார். கிருஷ்ணப்பா தியேட்டர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது வாகனம் ஒன்று ராமலிங்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி ரங்காபுரத்தை சேர்ந்தவர் மாதையன் (64). இவர், மோட்டார் சைக்கிளில் அரியானூர் பகுதிக்கு சென்ற போது அந்த வழியாக வந்த கார், இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மாதையன் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story