கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்
X
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : இருசக்கர வாகனம் பறிமுதல்
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார், நேற்று மேல அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் அந்தோணிராஜ் (19), மேற்கு சுனாமி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சுப்பிரமணியன் (18) எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 20 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story