பல நாட்களுக்கு பின் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி*

X
அருப்புக்கோட்டையில் பல நாட்களுக்கு பின் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாலை வேளையில் கரு மேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, ஆத்திபட்டி, செம்பட்டி, கட்டங்குடி, கோபாலபுரம், கஞ்சநாயக்கன்பட்டி, சுக்கிலநத்தம், வெள்ளையாபுரம், செட்டிகுறிச்சி, வாழ்வாங்கி, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கன மழை காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல நாட்களுக்கு பின் பெய்த கன மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதே நேரத்தில் ஆடி மாதத்தில் விதை விதைத்து மழைக்காக காத்திருந்த விவசாயிகள் மழையால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

