ராசிபுரம் அருகே லாரிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுனர். 2 நாட்களுக்குப் பிறகு சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை...

X
Rasipuram King 24x7 |9 Sept 2025 8:36 PM ISTராசிபுரம் அருகே லாரிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுனர். 2 நாட்களுக்குப் பிறகு சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(58) இவர் லாரி ஓட்டுனராக உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நெல் லோடு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே ஓட்டுனர் பழனிச்சாமி (7.09.25) அன்று காலை 9 மணி அளவில் தனது குடும்பத்தார்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பழனிச்சாமி தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் தவித்து வந்தனர்.அதனை அடுத்து பழனிச்சாமியின் மகள் கிருத்திகா லாரி உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியை பிறகு லொகேஷன் மூலம் ட்ராக் செய்து பின்னர் வாகனம் இருக்கும் இடத்திற்கு குடும்பத்தினர் வந்தனர் அங்கு பழனிச்சாமி மர்மமான முறையில் லாரிக்குள் உயிரிழந்த நிலையில் பின்னர் அவர் உடல் அழுகிய நிலையில் இருந்ததை அடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வெண்ணந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஓட்டுநர் லாரிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...
Next Story
