வாலிபருக்கு பாலியல் தொந்தரவு- 2 பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 20 வயதுள்ள மாற்றுத்திறனாளியான. இவர் கிருஷ்ணகிரியில் குரூப் தேர்வுக்கு படித்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி அன்று அவர் அங்கு பெண்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அதை கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகே பேன்சி கடை நடத்தி வரும் ஹசன் அலி (33) என்பவர் வீடியோ எடுத்து மிரட்டினார். மேலும் மாற்றுத்திறனாளி வாலிபரின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு இந்த நிலையில் மறுநாள் அவரை கிருஷ்ணகிரி போருந்து நிலையத்திற்கு அருகே ஹசன்அலி வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அதியமான் (39) என்பவரும் வாலிபருக்கு தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வாலிபர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஹசன்அலி, அதியமான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story

