வாலிபரிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 இளைஞர்கள் கைது

X
திண்டுக்கல்லை சேர்ந்த பாலன்(30) என்பவர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடியனூத்தைச் சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன்(27), YMR-பட்டியை சேர்ந்த பொதியன் மகன் இளமுருகன்(25) ஆகிய 2 பேரும் அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறிக்க முயற்சி செய்தபோது அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

