வாலிபர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது

வாலிபர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது
X
திண்டுக்கல் அருகே வாலிபர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது
திண்டுக்கல்லை அடுத்த பழைய வக்கம்பட்டி அருகே மைக்கேல்பட்டியை சேர்ந்த சிவகுமார்(37) என்பவரின் தலையை துண்டித்து கொலை செய்து தலையை சற்று தொலைவில் பாலத்திற்கு அடியே போட்டு சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா காவல் நிலைய போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி நீண்ட நேரம் தேடி தலையையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக், அங்கமுத்து மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழைய வக்கம்பட்டி சேர்ந்த கோபிகண்ணன்(27), தேவசூர்யா(20) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story