வடசென்னை 2 விரைவில் துவக்கம்: வேல்ஸ் நிறுவனம்

வடசென்னை 2 விரைவில் துவக்கம்: வேல்ஸ் நிறுவனம்
X
‘வடசென்னை 2’ படத்தினை விரைவில் துவங்க இருப்பதாக வேல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் ‘இட்லி கடை’. டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். முதலில் படத்தினை பாராட்டுவிட்டு பின்பு “தனுஷின் சம்மதத்துடன் இங்கு அறிவிக்கிறேன். வெற்றிமாறன் சாருடன் இணைந்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வடசென்னை 2’ படத்தினை விரைவில் துவங்குகிறோம்” என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பினால் தனுஷ் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். தனுஷ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் ‘வடசென்னை’. தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் தயாரிப்பு உரிமையினை வேல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறார் தனுஷ். சிம்பு நடிக்கவுள்ள படம் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் போது, ‘வடசென்னை 2’ குறித்த அறிவிப்பும் வெளியாகி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
Next Story