ஓசூர்: 2 கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் சூளகிரி அருகேயுள்ள அட்டகுறுக்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது இரண்டு ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வர்ஷா கொடுத்த புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

