பரமத்தி வேலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை.

X
Paramathi Velur King 24x7 |16 Sept 2025 7:43 PM ISTபரமத்தி வேலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், செப்.16: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 53). இவர், சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (50). இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பூபதி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய தமிழ்ச்செல்வி பூபதி வீட்டில் உள்ள இரும்பு பைப்பில் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கில் தொங்கிய பூபதியை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பூபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்ச்செல்வி ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக் டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைனக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல சேலம் மாவட் டம் கருமந்துரையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ஒரு மகன்,மகள் இருந்தனர். இவருடைய மகன் இளையராஜா (வயது 22) பி.காம் பட்டதாரி. இவரது தங்கை வித்யா, நாமக்கல் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தங்கை மற்றும் நண்பர்களை பார்ப்பதற்காக இளையராஜா நேற்று நாமக்கல் வந்துள்ளார். மாலை தனது நண்பர்களுடன் மோகனூர்- நாமக்கல் லத்துவாடி பிரிவு சாலையில் உள்ள கிணற்றின் அருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் இளையராஜா குதித்துள்ளார். அதிர்ச்சி அடைந்தநண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி இளையராஜாவின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
