காங்கிரஸ் உண்ணாவிரதம்; 2 எம்எல்ஏக்கள் பங்கேற்பு

X
தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து கிள்ளியூர் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் கிள்ளயூர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க தலைவர் பிரேம் சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்று போராட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். பிரின்ஸ் எம் எல் ஏ, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி மற்றும் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பி னுலால் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story

