செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு சிறை

செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு சிறை
X
குற்றச் செய்திகள்
பொன்னமராவதி பூக்குடி வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சின்னம்மாள்(75). இவர் கடந்த 23-06-2018 அன்று இரவு வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப் பதிந்து மருதுபாண்டியன், கணேஷ்குமார் ஆகி யோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பொன்னமராவதியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதி பதி பழனிவேல்ராஜன் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட மருது (எ) மருதுபாண்டியன், கணேஷ்குமார் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்கா வல் சிறை தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அப ராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Next Story