கோவை: ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு – சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் கேரளா படப்பிடிப்பு முடிந்து, நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். படத்தின் இரண்டாம் பாகத்துக்கான சில முக்கிய காட்சிகள், கோவை அருகிலுள்ள கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் கடந்த 17ஆம் தேதி தொடங்கி படமாக்கப்பட்டன. இதற்காக ரஜினிகாந்த் அன்றே விமானம் மூலம் கோவை வந்தடைந்து, அங்கிருந்து பாலக்காடு சென்றிருந்தார். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சனுடன் ரஜினிகாந்த் நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டார். ரஜினிகாந்தை வரவேற்க பல ரசிகர்கள் கூடி தலைவா! தலைவா! என உற்சாகக் கோஷம் எழுப்பினர்.
Next Story




