ஊத்தங்கரை: பிக்கப் வேன் திருடிய 2 பேர் கைது.

ஊத்தங்கரை: பிக்கப் வேன் திருடிய 2 பேர் கைது.
X
ஊத்தங்கரை: பிக்கப் வேன் திருடிய 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள முனியப்பன் கோவில் பகுதியில் நிறுத்தி இருந்த பிக்கப்வேன் ஒன்று திருடு போனது. இது குறித்து புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் வாணியம்பாடி அருகே பாப்பனேரி கிராமத்தைச் சேர்ந்த மோகன் வேல் (25) மற்றும் வேல் ஆனந்த் (26) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதை அடுத்து இருவரைப் போலீசார் கைது செய்து, திருடப்பட்ட வாகனத்தை மீட்டனர்.
Next Story