வேப்பனப்பள்ளியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு வேப்பனப்பள்ளி நகரில் உள்ள காந்தி சிலை, குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தோக படும்படி நின்றவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து சிகரமானப்பள்ளி முருகன் (45), சின்ன 3 தம்மண்டரப்பள்ளி மணி (38) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

