கருமத்தம்பட்டி பைபாஸ் சாலையில் பள்ளி பேருந்து விபத்து – 2 மாணவர்கள் காயம் !

X
கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டி பைபாஸ் சாலையில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். பேருந்தை சர்வீஸ் சாலைக்குத் திருப்பும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் பள்ளி பேருந்தின் முன்பக்க டயர் பழுதடைந்திருந்ததும், மழையால் சாலை நனைந்திருந்ததும் காரணமாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பினர். அதிர்ஷ்டவசமாக பின்னால் எந்த வாகனமும் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல் நாளிலேயே நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

