சூளகிரியில் கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்து நிலையம் அருகே சூளகிரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகபடும் படி நின்ற இரண்டு வாலிபர்களை போலீசார் சோதனையிடனர். போது அவர்கள் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 60 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்ததது. இதை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் சூளகிரி அருகே பீரேபாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் (23) மற்றும் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த பழவியாபாரி ராஜா (24) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.
Next Story

