குளித்தலை பேருந்து நிலையம் மற்றும் 2 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை

X
கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கரூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குளித்தலை நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. போக்குவரத்திற்கு இடையூறாக நெருக்கடியான இடத்தில் உள்ள குளித்தலை பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்ய கோரியும், நீதிமன்றத்திற்கு எதிராக நகரப் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரியும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை, சாக்கடை வசதிகளை தரமான முறையில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்வில் குளித்தலை சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுதாகர், மண்டல துணை செயலாளர் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் அக்னி இல அகரமுத்து, முன்னாள் கரூர் மேலிட பொறுப்பாளர் மாணிக்கம், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிவேந்தன், சுக்காம்பட்டி ராசையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்
Next Story

