திண்டுக்கல் அருகே ஆடு வளர்க்கும் பட்டியில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது

90 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே ஆடு வளர்க்கும் பட்டியில் குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது90 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் திண்டுக்கல் புறநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சித்திக், கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் புறநகர் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது பெரியபள்ளப்பட்டி பகுதியில் ஆடு வளர்க்கும் பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தோமையார்புரத்தைச் சேர்ந்த சையது அபுதாகிர்(40), பேகம்பூரை சேர்ந்த அஜிஸ்தாரிக்(40) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 90 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story