மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் பணம் நகை கொள்ளை போலீசார் விசாரணை
வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் பணம் நகை கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் பணம் நகை கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் பணம் நகை கொள்ளை
Tiruchirappalli (East) King 24x7 |20 Dec 2025 4:37 PM ISTமணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்சம் பணம் நகை கொள்ளை போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம்இ மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (70). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவரது குடும்பத்தினர் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் தூக்கி உள்ளனர். இன்று காலை எழுந்து பார்த்த போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பிரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 ½ சவரன் நகையும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும் நள்ளிரவில் அருகில் உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து விட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



