காங்கேயம் அருகே உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது

X
Kangeyam King 24x7 |23 Dec 2025 6:46 PM ISTதிருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லேரி பகுதியில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தவெக தெருமுனை கூட்டம் குறித்து கேட்ட காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் தவெக நிர்வாகிகள் 2 பேரை காங்கேயம் காவல்துறை கைது செய்தனர்.
காங்கேயம் சென்னிமலை சாலையில் ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லேரி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று காலை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது என காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட காவலர்கள் அங்கு சென்று கேட்ட போது, அங்கிருந்த தவெக நிர்வாகிகள் எஸ். ஐக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து எஸ். ஐ சரவணன் அளித்த புகாரின் பேரில் தவெக ஆலம்பாடி கிளை செயலாளர் நடராஜ் (51), செயற்குழு உறுப்பினர் பிரதீப் குமார் ( 30) ஆகிய 2 பேரை காங்கேயம் போலீசார் கைது செய்து அரசு பணியாளர்களை பணி செய்யாமல் தடுத்தது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Next Story
