திருச்செங்கோடு செங்கோடம் பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த தனியார் நிதி நிறுவன ஊழியரிடமிருந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை ஒருவர் கைது2பேர் மறைவு

X
Tiruchengode King 24x7 |26 Dec 2025 9:14 PM ISTதிருச்செங்கோடு செங்கோடம் பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த தனியார் நிதி நிறுவன ஊழியரி டமிருந்து கத்தியைகாட்டி கொன்று விடுவதாக மிரட்டி ரூ34 ஆயிரத்து 200 ரூபாய் கொள்ளையடித்த மூன்று பேர். வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி சரத் என்கிற சரத்குமார் கைது 2 பேர் தலைமறைவு
திருச்செங்கோடு பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி 27இவர் ஐ டி எஃப் சி பஸ்ட் பரத் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார் இவரும்இவருடன் அதே நிறுவனத்தில் கலெக்க்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வரும் பூவரசன் 24என்பவரும் இவர்கள் நிறுவனத்தில் கடன் கேட்டிருந்த செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வையக ராஜா என்பவரது வீட்டை ஆய்வுக்கு சென்ற போது வையக ராஜா வீட்டில் இல்லாததால் மதிய உணவு வேளை நெருங்கியதாலும்வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸ் உணவை அருகில் இருந்த வேப்பமரத்தடியில் வண்டி மேலே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது டிஎன் 34 ஆர் 2387என்ற எண்ணுள்ள ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் வண்டியில் வந்த மூன்று பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த கார்த்தி மற்றும் பூவரசன் ஆகியோரை உங்களுக்கு இங்கு என்ன வேலை என கேட்டு மிரட்டி கத்தியை காட்டி குத்தி விடுவேன் என கூறிகையில் பணம் எவ்வளவு வைத்திருக்கிறாய் என கேட்டு கார்த்தி பையில் வைத்திருந்த collection பணம் 34, ஆயிரத்து 200 ஐபிடுங்கிக் கொண்டதோடு மேலும் ஏதாவது பணம் வைத்திருக்கிறாயா என கேட்டு அருகில் இருந்த வேப்பமரத்தில் குச்சியை உடைத்து இருவரையும் தாக்கி உள்ளனர்.எதுவும் அவரிடம் இல்லை என தெரிந்து பறித்துக் கொண்ட 34,200 உடன் ஓடிவிட்டனர்.பணத்தை பறி கொடுத்த கார்த்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் சரத் என்கிற சரத்குமார் 30,பார்த்திபன் 40 வெள்ளியங்கிரி 40 என மூன்று பேர் தான் இந்த சம்பவத்தை செய்தது என அறிந்து இவர்களை தேடிச் சென்றபோது வீட்டில் பதுங்கி இருந்தசரத் என்கிற சரத்குமாரை கைது செய்தனர் மேலும்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை நகர போலீசார்காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட சரத்திடம் இருந்து ஹீரோ ஹோண்டா பைக்கை பறிமுதல் செய்த போலீசார் சரத் மீது அச்சுறுத்தி பொருள் படித்தல் கொலை மிரட்டல் விடுத்தல் என டி என் எஸ் சட்டப்பிரிவு 308/4,351/3 ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் வெள்ளிங்கிரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் கைது செய்யப்பட்ட சரத்என்கிற சரத்குமார் ஏற்கனவே மொளசிகாவல் நிலையத்தில் பதிவாகியுள்ள ஒரு கொலை வழக்கிலும் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் இதேபோல் அச்சுறுத்தி பொருள் பறித்தல் இரண்டு வழக்குகளில் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.இவர் சரித்திர பதிவேடு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக காவல் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனர்
Next Story
