கள்ளிமந்தயம் அருகே பைக் மீது கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

கள்ளிமந்தயம் அருகே பைக் மீது கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு
X
Dindigul
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் அருகே வாகரையில் பைக் மீது கார் மோதியதில் பைக்கில் சென்ற விவசாயிகள் பொருளூர், வெறுவாடிநாயக்கன் வலசு பகுதியை பழனியப்ப கவுண்டர் மகன் வேலுச்சாமி(62), தேவத்தூர், பில்லாகாட்டுவலசு பகுதியை சேர்ந்த காளிச்சாமி மகன் கருப்பசாமி(62) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேற்படி சம்பவம் குறித்து கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கார் ஓட்டுநர் திண்டுக்கல் பாரதிபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் செந்தில்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story