அரசு பள்ளி மாணவி இலக்கிய போட்டி பரிசு வென்று வெளிநாடு செல்ல தேர்வு மேலும் 2 மாணவிகள் சாதனை

X
Komarapalayam King 24x7 |27 Jan 2026 9:31 PM ISTகுமாரபாளையம் அரசு பள்ளி மாணவி இலக்கிய போட்டி பரிசு வென்று வெளிநாடு செல்ல தேர்வாகியுள்ளதுடன் மேலும் இரு மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சந்தோஷி, தமிழக அரசால் நடத்தப்பட்ட இலக்கிய மன்றப் போட்டிகளில் மாவட்ட அளவில் ஆங்கில பேச்சுப் போட்டியிலும், கவிதை எழுதுதல் போட்டியிலும் முதலிடம் பெற்று மதுரையில் நடந்த மாநில அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டியில் மாநிலத்தில் முதலிடம் பெற்று தமிழக அரசால் அழைத்துச் செல்லப்படும் வெளிநாடு சுற்றுலாவிற்கு இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி இனியா சக்தி தமிழ் பேச்சுப் போட்டி, கவிதை எழுதுதல் ,கதை சொல்லுதல் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடமும், பிரியதர்ஷிகா என்ற மாணவி ஆங்கில கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றனர். சந்தோஷி மற்றும் இனியா சக்தி ஆகிய இரண்டு மாணவிகளும் தமிழக அரசால் பிப். 3 முதல் பிப்.7 வரை சென்னையில் நடத்தப்படும் பணிமனையில் பங்குபெற தேர்வாகி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இந்த மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை காந்தரூபி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
